நிகழ்ச்சி நிரல் - காவடிகெட்டு - 2011

              

                                                     காவடிகெட்டு   விழா  பூஜை   நாள்   மற்றும்   நேரங்கள்   பின்வருமாறு

06-02-2011 

காலை 7:00 மணி

காவடி பூஜையில் வைக்கப்படும். 

08-02-2011 

மாலை 6:00 மணி

நாதஸ்வர மேளம் நடைபெறும். 

08-02-2011 

மாலை 8:30 மணி

காவடி பூஜை நடைபெறும். 

08-02-2011 

மாலை10:30 மணி

கறிக்காய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். 

09-02-2011 

காலை 2:30 மணி

காவடியை ஆற்றுக்கு கொண்டு சென்று நீராட்டும் நிகழ்ச்சி.

09-02-2011 

காலை 3:00 மணி 

காவடிக்கு எண்ணெய் எடுக்க செல்லுதல். 

09-02-2011 

காலை 4:30 மணி 

காவடி கலசத்தில் எண்ணெய் அடைத்தல். 

09-02-2011 

காலை 5:00 மணி 

காவடி அலங்காரம் நடைபெறும்.

09-02-2011 

காலை 7:00 மணி 

காவடி அலங்கார தீபாராதனை நடைபெறும். 

09-02-2011 

காலை 7:30 மணி 

காவடி பவனி புறப்படுதல். 

09-02-2011 

காலை 11:45 மணி

காவடி பவனி முடிந்து காவடி கோவிலில் இறக்கப்படும். 

09-02-2011 

மதியம் 11:50 மணி 

அன்னம் படைத்து காவடிக்கு தீபாராதனை நடத்தப்படும்.

09-02-2011 

மதியம் 12:30 மணி 

அன்னதானம் (கஞ்சி தர்மம்) நடைபெறும். 

09-02-2011 

மாலை 5:30 மணி

காவடி பூஜை மற்றும் காவடி பவனி 

09-02-2011 

மாலை 6:30 மணி 

திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக காவடி புறப்படும். 

                              காவடியை   பாத   யாத்திரையாக   கொண்டு   சென்று   13-02-2011  அன்று   காலை   8:00   மணி   அளவில்

            திருச்செந்தூரிலுள்ள      நமது      இரணியல்      கீழத்தெரு     செட்டு     சமுதாய     புதிய     கட்டிடத்தில்     வைத்து

            தீபாராதனை நடத்தப்படும்.  பின்னர் காவடியை  செந்திலாண்டவர் சந்நதிக்கு எடுத்து  சென்று காவடி  கலசத்தில்

            உள்ள எண்ணையால் செந்திலாண்டவர்க்கு அபிஷேகம் நடைபெறும்.

                              மதியம்    12:00 மணி   அளவில்   இ.கீ.செ.ச.   கட்டிடத்தில்    வைத்து    இடும்பன்    பூஜை    நடைபெறும்.

            பின்னர்  12:30  மணி   அளவில்   அன்னதானம்   நடைபெறும்.

                              மேற்கூறிய    இவ்விழாக்களுக்கு   நமது    சமுதாய    மக்கள்   அனைவரும்   குடும்பத்துடன்   தவறாது

            வருகை  தந்து  விழாவினை  சிறப்பித்து  முருகனருள்  பெற்று  செல்லுமாறு  அன்புடன்  அழைக்கிறோம்.

                               இக்காவடி    கெட்டு   விழாவிற்கு  சமுதாய   உறுப்பினர்கள்  அனைவரும்   காவடி   வகைக்கு   Rs.150/-

            மற்றும்   மேற்கூறிய   அன்னதானங்களுக்கு    தங்களால்    இயன்ற   பொருளுதவியும்,   பண   உதவியும்   தந்து

            விழாவினை  சிறப்பித்து   செந்திலாண்டவர்  அருள்   பெற்றுய்யுமாறு   அன்புடன்   வேண்டுகிறோம்.

          

             குறிப்பு :   காவடிகெட்டு  மற்றும்  அன்னதானத்திற்கு  பண  உதவி   செய்ய  விரும்பும்   பக்தர்கள்    M.O   அல்லது

                         "EKK Annadhana kuzhu"   என்ற   பெயரில்    வரைவோலை / காசோலை    எடுத்து

செயலாளர்,  

ஸ்ரீசிங்க   ரட்சக   விநாயகர்  தேவஸ்தானம்,   

கீழத்தெரு,     இரணியல்,     

நெய்யூர்    அஞ்சல்  - 629802    

                                            என்ற     முகவரிக்கு     அனுப்பி    வைக்குமாறு   அன்புடன்   கேட்டுக்   கொள்ளபடுகிறார்கள்.

                                

                 குறிப்பு 2:   மேற்கூறிய   நிகழ்ச்சி   நிரலில்   நேரம்   மாறுதலுக்குட்பட்டது.

 

Back

 

 

Email

Designed and Developed by

இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்கரட்சக விநாயகர் தேவஸ்தானம்