|
13-02-2013 |
காலை 7:00 மணி |
காவடி மற்றும் வேல் பூஜையில் வைக்கப்படும். மூன்று நாட்கள் தினமும் காலையும், மாலையும் பூஜை நடைபெறும். |
|
15-02-2013 |
மாலை 6:00 மணி |
வேல்காவடி முருகனுக்கு அலகு குத்துதல் |
| 15-02-2013 |
மாலை 6:45 மணி |
நாதஸ்வர மேளம் நடைபெறும். |
|
15-02-2013 |
மாலை 8:30 மணி |
காவடி பூஜை நடைபெறும். |
|
15-02-2013 |
மாலை10:30 மணி |
கறிக்காய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். |
|
16-02-2013 |
காலை 3:00 மணி |
காவடியை ஆற்றுக்கு கொண்டு சென்று நீராட்டும் நிகழ்ச்சி. |
|
16-02-2013 |
காலை 3:15 மணி |
காவடிக்கு எண்ணெய் எடுக்க செல்லுதல். |
|
16-02-2013 |
காலை 4:45 மணி |
காவடி கலசத்தில் எண்ணெய் அடைத்தல். |
|
16-02-2013 |
காலை 5:15 மணி |
காவடி அலங்காரம் நடைபெறும். |
|
16-02-2013 |
காலை 7:30 மணி |
காவடி அலங்கார தீபாராதனை நடைபெறும். |
|
16-02-2013 |
காலை 8:00 மணி |
காவடி பவனி புறப்படுதல். |
|
16-02-2013 |
காலை 12:00 மணி |
காவடி பவனி முடிந்து காவடி கோவிலில் இறக்கப்படும். |
|
16-02-2013 |
மதியம் 12:10 மணி |
அன்னம் படைத்து காவடிக்கு தீபாராதனை நடத்தப்படும். |
|
16-02-2013 |
மதியம் 12:30 மணி |
அன்னதானம் (கஞ்சி தர்மம்) நடைபெறும். |
|
16-02-2013 |
மாலை 5:00 மணி |
காவடி பூஜை மற்றும் காவடி பவனி |
| 16-02-2013 |
மாலை 5:30 மணி |
திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக காவடி புறப்படும். |
| 17-02-2013 |
காலை 8:00 மணி |
காவடி சமூகரெங்கபுரம் சென்றடையும். அங்கே மதியம் 12:30 மணி அளவில் கஞ்சிதர்மம் நடைபெறும் |
| 18-02-2013 |
இரவு 10:00 மணி |
கல்லாற்றில் வைத்து காவடிக்கு பஞ்சாமிர்தம் வைத்து பூஜை செய்து காவடி முருகனால் திருச்செந்தூருக்கு எடுத்து செல்லப்படும். |
| 20-02-2013 |
காலை 8:00 மணி |
காவடிக்கு பூ அலங்காரம் செய்து இ.கீ.செ.ச. சத்திரத்தில் இருந்து கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு காவடியில் உள்ள எண்ணெயை கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும். |
|
20-02-2013 |
மதியம் 12:30 மணி |
இ.கீ.செ.ச சத்திரத்தில் வைத்து அன்னதானம் நடைபெறும். |
காவடியை பாத யாத்திரையாக கொண்டு சென்று 20-02-2013 புதன்கிழமை காலை 8:00 மணி அளவில்
திருச்செந்தூரிலுள்ள நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய புதிய கட்டிடத்தில் வைத்து தீபாராதனை
நடத்தப்படும். பின்னர் காவடியை செந்திலாண்டவர் சந்நதிக்கு எடுத்து சென்று காவடி கலசத்தில் உள்ள
எண்ணையால் செந்திலாண்டவர்க்கு அபிஷேகம் நடைபெறும்.
மதியம் 12:00 மணி அளவில் இ.கீ.செ.ச. கட்டிடத்தில் வைத்து இடும்பன் பூஜை நடைபெறும். பின்னர்
12:30 மணி அளவில் அன்னதானம் நடைபெறும்.
மேற்கூறிய இவ்விழாக்களுக்கு நமது சமுதாய மக்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாது
வருகை தந்து விழாவினை சிறப்பித்து முருகனருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இக்காவடிகெட்டு விழாவிற்கு சமுதாய உறுப்பினர்கள் அனைவரும் காவடி வகைக்கு Rs.200/- மற்றும்
மேற்கூறிய அன்னதானங்களுக்கு தங்களால் இயன்ற பொருளுதவியும், பண உதவியும் தந்து விழாவினை
சிறப்பித்து செந்திலாண்டவர் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு : காவடிகெட்டு மற்றும் அன்னதானத்திற்கு பண உதவி செய்ய விரும்பும் பக்தர்கள் M.O அல்லது
"EKK Annadhana kuzhu" என்ற பெயரில் வரைவோலை / காசோலை எடுத்து
செயலாளர்,
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்,
கீழத்தெரு, இரணியல்,
நெய்யூர் அஞ்சல் - 629802
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
குறிப்பு 2: மேற்கூறிய நிகழ்ச்சி நிரலில் நேரம் மாறுதலுக்குட்பட்டது.
Back