|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2015
விழா - இரண்டாம் நாள்
கணபதி ஹோமம் - முத்தாரம்மன் கோவில்
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா
2-ம் நாளாக மே மாதம் 11-ம் தேதி திங்கள்
கிழமை
அன்று காலையில் முத்தாரம்மன் கோவிலில்
கணபதிஹோமத்துடன் சிறப்பாக தொடங்கியது.
அன்று காலை எல்லா கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து
பேண்ட் செட் மேளம் நடைபெற்றது.
பின்னர் மதியம் 12 மணி அளவில் முத்தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. அதனை
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நையாண்டி மேளம்
மாலை 6:00 மணி அளவில் நையாண்டி மேள கச்சேரி
நடைபெற்றது.
குருதி பூஜை
இரவு 8:30 மணி அளவில் பூதத்தான் கோவிலில் குருதி பூஜை நம்பூதிரிகளால் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முத்தாரம்மனுக்கு மகா அலங்கார தீபாராதனையும் நடந்தது.
பின்னர் பக்தர்களுக்கு
நைவேத்திய பிரசாதம்
வழங்கப்பட்டது. அத்துடன்
2-ம் நாள் கொடை விழா இனிதே முடிவு பெற்றது.
Back
|