|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2015
மூன்றாவது நாள் - கொடை விழா
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க
ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழாவின் மூன்றாவது நாளான கொடை விழா மே மாதம் 13-ம் தேதி
செவ்வாய் கிழமை அன்று காலை
கலச பூஜை மற்றும் வில்லுபாட்டுடன்
மிகச்சிறப்பாக தொடங்கியது.
அன்று காலை 7:30 மணி அளவில் யானையுடன் ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று புது
நீர் எடுத்து வந்து
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மதியம் 12:30 மணி அளவில்
மகா தீபாராதனை
நடந்தது. அதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெற்றது.
கலச பூஜை (முத்தாரம்மன்
கோவில் )
புதுநீர் எடுக்க செல்லுதல்
அபிஷேக குடம்
அபிஷேக குடத்தில் பால், சந்தனம், பன்னீர், மஞ்சள், களபம் என 21
குடங்களில் அபிஷேக பொருட்களை
நிரப்பி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
புதுநீர் & அபிஷேக குடம்
தீபாராதனை
புதுநீர் எடுத்து யானை பவனி
அம்மனுக்கு பொங்கலிடுதல்
அம்மனுக்கு புதுநீர் அபிஷேகம் முடிந்ததும் மதியம் 11:45 மணி அளவில் சன்னதி
தெருவில்
அனைவரும் தத்தம் வீடுகளின் முன்னால் பொங்காலை போட்டனர்.
செண்டை மேளம்
மாலை 6:00 மணி அளவில்
செண்டை மேளம் கச்சேரி நடந்தது. அதன் பின்னர் இரவு
8.30 மணி
அளவில் தீபாராதனை நடந்தது.
பூ அலங்காரம்
வாகன அலங்காரம்
அம்மன் வாகனத்தில் பவனி
பின்னர் இரவு 9 :00 மணி அளவில் சப்பற
வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வாகன பவனி
தொடங்கியது.
வாகன பவனியானது காவடி செல்லும் பாதையில் சென்று இரவு 12: 15 மணி அளவில் கோவிலை
வந்து அடைந்தது. அதனை தொடர்ந்து இரவு
1:00 மணிக்கு அம்மனுக்கு ஒடுக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் வாண வேடிக்கை நடைபெற்றது. ஒடுக்கு சாதம்
பிரசாதமாக கொடுக்கப்பட்டது.
Back |