|
முத்தாரம்மன் கோவில்
சிறப்பு வழிபாடு - 2014
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் உள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழா
சிறப்பு பூஜையானது திங்கள் கிழமை (12.05.2014) அன்று காலை
பிள்ளையார்
கணபதி ஹோமத்துடன் சிறப்பாக
தொடங்கியது.
கோவில் அலங்காரம்
கணபதிஹோமம்
பஜனை
திங்கள் கிழமை இரவு பூதத்தான் கோவிலில் குருதிபூஜை சிறப்பாக
நடைபெற்றது.
செவ்வாய்கிழமை காலை முத்தாரம்மன் கோவிலில் காலை கணபதிஹோமம்
மற்றும் கலசபூஜையுடன் கொடைவிழா சிறப்பு பூஜை இனிதே தொடங்கியது.
புதுநீர் எடுக்க ஆற்றுக்கு செல்லுதல்.
புதுநீர் எடுத்து பவனி வருதல்
புதுநீர் எடுத்து வந்தவுடன் அம்மனுக்கு
14 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சமுதாய மக்கள் கோவிலின்
முன்புறம் பொங்கலிட்டனர்.
உச்ச தீபாராதனை
அன்னதானம்
பின்னர் மாலையில் மகளிர் அணியினரால்
திருவிளக்கு பூஜை
முத்தாரம்மன் கோவிலின் முன்புறமுள்ள மண்டபத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.
நையாண்டி மேளம்
இரவு 11:00 மணி அளவில் மஹா
தீபாராதனை நடத்தப்பட்டது. அத்துடன் இச்சிறப்பு
பூஜை இனிதே நிறைவடைந்தது.
இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த
சமுதாய மக்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பில்
மிக்கநன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இவ்விழாவிற்கு பொருளுதவியும்,
உடல்உழைப்பும் தந்த, சமுதாய பெருமக்கள்,
ஊர்மக்கள், இரணியல் நண்பர்கள்,
வெளிநாட்டில் இருந்துபொருளுதவி அளித்த அன்பர்களுக்கும்,
விழாகுழுவின் சார்பில்
மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு,
விழாகுழுவினர்.
Back |