|
கும்பாபிஷேகம் - தொடக்க விழா
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் வருகின்ற ஜனவரி
மாதம் 22-ம் நாள் செவ்வாய்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. இவ்விழாவை முன்னிட்டு
கோபுர வேலைகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. கோபுர வேலைகள் 95% முடிவடைந்துள்ள
நிலையில் டிசம்பர் மாதம் 17-ம் தியதி முதல் டிசம்பர் 24-ம் தியதி வரை கும்பாபிஷேக பரிகார பூஜை நடைபெற
இருக்கின்றது. இதன் அழைப்பிதழை பார்க்க கீழே உள்ள Link - ஐ click செய்யவும்.
கும்பாபிஷேக பரிகார பூஜை - Dec 17th - Dec 24th 2012
இவ்விழாவிற்கு நமது சமுதாய மக்கள் அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு
அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு : இப்பரிகார பூஜையில் டிசம்பர் 19 மற்றும் டிசம்பர் 20-ம் தியதியில் நடைபெறும் பூஜை மிகவும் சக்தி
வாய்ந்த பூஜையாகும். இதில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இறையருள் பெற்று செல்லுமாறு சமுதாய
மக்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இவண்
கும்பாபிஷேக விழா பணிக்குழு
Back |