புதிய  சத்திரம் திறப்பு விழா -  2016

                                             நமது  இரணியல் கீழத்தெரு  ஸ்ரீசிங்க    ரட்சக    விநாயகர்  கோவிலுக்கு  சொந்தமாக   ஒரு சத்திரம்   

                 திருச்செந்தூரில் இருப்பது  உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.    அக்கட்டிடத்தில் ஒரு பகுதி பழமையான

                 ஓட்டு  கட்டிடமாகவும்,   பாதுகாப்பின்றி இருக்கின்ற   காரணத்தால் அக்கட்டிடத்தின்  முகப்பு பகுதியை  இடித்து

                விட்டு புதிய கட்டிடம் கட்டுவதென்று முடிவெடுக்கப்பட்டு கடந்த   ஆறு மாத   காலமாக   சமுதாய   மக்களிடையே

                 கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.   

                                        இந்த    புதிய   கட்டிடம்  கட்டுவதற்கு அடிக்கல்  நாட்டு  விழாவானது 27-08.2015   வியாழகிழமை அன்று

                 திருச்செந்தூரில் வைத்து காலை 10:30   மணி அளவில் நடைபெற்றது.  இக்கட்டிடம் கட்டுவதற்கு நமது சமுதாய

                 உறுப்பினர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது.   இப்பொழுது கட்டிட   வேலைகள் முழுமையடைந்து  

                 வருகின்ற 20th Jan 2016 அன்று திறப்பு விழா நடைபெற இருக்கிறது.   இத்திறப்பு விழாவில் நமது சமுதாய  மக்கள்

                 கலந்து கொண்டு சிறப்பிக்க    வேண்டுமென்று சமுதாய  &  தேவஸ்தான  தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பில்

                 அன்புடன் அழைக்கிறோம்.

INVITATION 

Back 

[footer.htm]