|
புதிய அலுவலக கட்டிடம் திறப்புவிழா - 2013
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அலுவலக கட்டிடம் பழமையான
ஓட்டு கட்டிடமாகவும், பாதுகாப்பின்றி இருந்த காரணத்தால் முத்தாரம்மன் கோவில் அருகில் புதிய அலுவலக
கட்டிடம் கட்டுவதென்று முடிவெடுக்கப்பட்டு கடந்த ஆறு மாத காலமாக கட்டுமான பணிகள் நடைபெற்று
வந்தது. இதனுடன் சேர்த்து விருந்தினர்கள் தங்குவதற்கு என்று ஒரு கட்டிடமும் சேர்த்து கட்டப்படுள்ளது.
இதன் திறப்பு விழாவானது விநாயகர் சதுர்த்தி தினமன்று நடைபெற்றது. அன்று காலை 7:00 மணி அ ளவில்
திரு. கோலப்பன் ( நெய்வேலி ) அவர்களால் இரு கட்டிடமும் திறக்கப்பட்டது. மேலும் கணபதி ஹோமமும்
நடத்தப்பட்டது. பின்னர் மகளிர் அணியினரால் புதிய அலுவலக கட்டிடத்தில் பால் காய்ச்சபட்டது.






Back |