|
வருஷாபிஷேக விழா -2012 அழைப்பிதழ்
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்
விநாயகர் பெருமானை சிலையாக பிரதிஷ்டை செய்த நாளான தை மாதம் ரோகிணி நட்சத்திரம் அன்று
வருஷாவருஷ விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வருடம் பிப்ரவரி 3, 2012
வெள்ளி கிழமை ரோகிணி நட்சத்திரத்தன்று வருஷாபிஷேக விழா நடைபெற இருக்கின்றது. அன்று காலை
முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
| வருஷாபிஷேக பூஜை |
| காலை 6:30 மணி |
: |
கணபதி ஹோமம் |
| காலை 7:00 மணி |
: |
அபிஷேகம் |
| காலை 8:15 மணி |
: |
தீபாராதனை |
| காலை 9:30 மணி |
: |
கலச பூஜை தொடங்குகிறது. |
| மதியம் 12:00 மணி |
: |
கலசாபிஷேகம் |
| மதியம் 12:30 மணி |
: |
சிறப்பு தீபாராதனை |
வருஷாபிஷேக விழாவில் நம்பூதிரிகளை கொண்டு கலசாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது.
முன்னதாக 9 கலசங்களை கொண்டு கலச பூஜை நடத்தப்படும். பின்னர் அக்கலசங்களில் உள்ள நீரால்
ஒவ்வொரு சன்னதியிலும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் நண்பகல் 12.30 மணியளவில் உச்சகால
தீபாராதனை நடைபெறும். இவ்விழாவில் நம் சமுதாய மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன்
கலந்து கொண்டு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
Back
|