|
வருஷாபிஷேக விழா -2017 அழைப்பிதழ்
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்
விநாயகர் பெருமானை சிலையாக பிரதிஷ்டை செய்த நாளான தை மாதம் ரோகிணி நட்சத்திரம் அன்று
வருஷாவருஷ விழாவாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வருடம் பிப்ரவரி 6-ம் நாள்
திங்கள்கிழமை ரோகிணி நட்சத்திரத்தன்று வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற இருக்கின்றது. அன்று
காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
| வருஷாபிஷேக பூஜை |
| காலை 6:00 மணி |
: |
கணபதி ஹோமம் |
| காலை 7:00 மணி |
: |
அபிஷேகம் |
| காலை 8:15 மணி |
: |
தீபாராதனை |
| காலை 9:30 மணி |
: |
கலச பூஜை தொடங்குகிறது. |
| மதியம் 12:00 மணி |
: |
கலசாபிஷேகம் |
| மதியம் 12:30 மணி |
: |
சிறப்பு தீபாராதனை |
வருஷாபிஷேக விழாவில் நம்பூதிரிகளை கொண்டு கலசாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது.
முன்னதாக 9 கலசங்களை கொண்டு கலச பூஜை நடத்தப்படும். பின்னர் அக்கலசங்களில் உள்ள நீரால்
ஒவ்வொரு சன்னதியிலும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் நண்பகல் 12.30 மணியளவில் உச்சகால
தீபாராதனை நடைபெறும். இவ்விழாவில் நம் சமுதாய மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன்
தவறாது கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்து நமது ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் அருள் பெற்று
செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு : அபிஷேகத்திற்குரிய பால், எண்ணெய், பன்னீர், தயிர், தேன், இளநீர், போன்ற பொருட்களை
கொடுக்க விரும்பும் பக்தர்கள் காலை 6:45 மணி முன்பு கோவிலில் கொடுக்குமாறு அன்புடன்
கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.
Back
|