|
ஆடி நிறை விழா - 2018
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தான கோவிலில்
ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதமும் நெற்கதிர்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆடி-நிறை விழாவாக இரணியல் கீழத்தெரு
செட்டு சமுதாய அன்பர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடமும் இவ்விழா கடந்த 15.08.2018
புதன்கிழமை அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கான அழைப்பிதழ் ஊர்மக்கள் மற்றும் சமுதாய
மக்கள் பலருக்கும் தரப்பட்டிருந்தது. நமது இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது. அதன் விவரம் அறிய
கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click பண்ணவும்.
ஆடி நிறை விழா - 2018 அழைப்பிதழ் 
அன்று காலை 7:00 மணி அளவில் நெற்கதிர்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் எல்லா
கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்கு வந்திருந்த
பக்தர்கள் அனைவருக்கும் நெற்கதிர்கள் வழங்கபட்டது. பக்தர்கள் அதனை தங்கள் வீடுகளுக்கு எடுத்து
சென்று தங்கள் வீட்டிலுள்ள அனைத்து அறைகளிலும் அதனை கட்டினால் அந்த ஆண்டு முழுவதும் தங்கள்
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
Back
|