|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2013
இரண்டாவது நாள் - கொடை விழா
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க
ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழாவின் இரண்டாவது
நாளான கொடை விழா மே மாதம் 14-ம் தேதி
செவ்வாய் கிழமை அன்று காலை கணபதி ஹோமம் மற்றும் வில்லுபாட்டுடன்
மிகச்சிறப்பாக தொடங்கியது.
அன்று காலை 10 மணி அளவில்
யானையுடன் ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று புது
நீர் எடுத்து வந்து
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மதியம் 12:30 மணி அளவில்
மகா தீபாராதனை
நடந்தது. அதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெற்றது.



























மாலை 6:00 மணி அளவில் சன்னதி
தெருவில் அனைவரும் தத்தம் வீடுகளின் முன்னால்
பொங்காலை
போட்டனர். அதனை தொடர்ந்து 6:45 மணி அளவில்
செண்டை மேளம் கச்சேரி நடந்தது. அதன் பின்னர் மாலை
தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 9 :30 மணி அளவில் சப்பற
வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வாகன பவனி
தொடங்கியது. வாகன பவனியானது காவடி செல்லும்
பாதையில் சென்று இரவு 12: 15 மணி அளவில் கோவிலை
வந்து அடைந்தது. அதனை தொடர்ந்து இரவு
1:00 மணிக்கு அம்மனுக்கு ஒடுக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் வாண வேடிக்கை நடைபெற்றது. ஒடுக்கு சாதம்
பிரசாதமாக கொடுக்கப்பட்டது.


















Back |