|
விநாயகர் சதுர்த்தி விழா - 2011
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் செப்டம்பர் 01, 2011
வியாழ கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று காலையும்,
மாலையும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ் - 2011 
காலை 7:30 மணி அளவில் சிறப்பு கணபதி ஹோமம் ஸ்ரீ.சி.ர.வி.கோவில் அர்ச்சகரால் நடத்தப்பட்டது.
மாலை 6:30 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ.சி.ர.வி.கோவிலில் நடைபெற்றது.
மாலை தீபாராதனைக்கு பிறகு இரவு 8:30 மணி அளவில் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
தாமரை, துளசி, வில்வ இலை, செவ்வந்தி, அரளி, ரோஜா, அருகம்புல் மாலை, வாடாமல்லி, முல்லை
ஆகிய மலர்களை கொண்டு புஷ்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
Back |