|
விநாயகர் சதுர்த்தி விழா - 2018
நமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் செப்டம்பர் 13, 2018 அன்று
விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று காலையும், மாலையும் சிறப்பு
பூஜைகள் நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பிதழ் ஊர்மக்கள் மற்றும் சமுதாய மக்கள் பலருக்கும்
தரப்பட்டிருந்தது. நமது இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது. அதன் விவரம் அறிய கீழே
கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click பண்ணவும்.
விநாயகர் சதுர்த்தி விழா - 2018 அழைப்பிதழ் 
மாலை தீபாராதனைக்கு பிறகு இரவு 8:30 மணி அளவில் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. தாமரை,
துளசி, வில்வ இலை, செவ்வந்தி, அரளி, ரோஜா, அருகம்புல் மாலை, வாடாமல்லி, முல்லை, தெற்றிபூ,
ஆகிய மலர்களை கொண்டு புஷ்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
Back
|