|
ஒடுப்பறை நாகரம்மன் கோவில் புதிய தோற்றம்
நமது ஒடுப்பறை நாகரம்மன் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி, சிவன் பார்வதி கணபதி,
நாகராஜா - நாகரம்மன் சன்னதிகளில் மேற்கூரை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று
வருகின்றது. தற்போது அப்பணி நிறைவு பெற்றுள்ளது. அதன் திறப்பு விழா பிப்ரவரி 12, 2012 -ம் நாள் கடைசி
ஞாயிற்றுகிழமை நடைபெற இருக்கிறது. அவ்விழாவிற்கான அழைப்பி்தழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் இதனையே அழைப்பாக ஏற்று விழாவிற்கு குடும்பத்துடன்
வந்திருந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாகரம்மன் கோவிலின் தற்போதைய எழில்மிகு தோற்றம்.







Back
|